சென்னை,
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு பிறகு வங்கிகள் மீண்டும் செயல்பட துவங்கியதில் இருந்து பழைய ரூபாய் தாள்களை மாற்றி புதிய ரூபாய் தாள்களை பெற மக்கள் வங்கிகளில் அலை மோதினர். ஏடி.எம் மையங்கள் மூலமாக மக்கள் பணத்தை எடுக்கத்துவங்கியுள்ளனர்.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் விஜய் மத்திய அரசின் அறிவிப்பு குறித்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மத்திய அரசின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்தார். இது குறித்து விஜய் கூறியதாவது:- பணம் எடுக்க முடியாமல் தவிப்பவர்களின் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. மக்கள் அன்றாடசெலவுக்கு திண்டாடுகின்றனர். மருந்து வாங்குபவர்கள் கூட சிரமப்படுகிறார்கள். நிலைமை சீராகி வருவது ஆறுதல் அளிக்கிறது.
மத்திய அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் 20 சதவீத பணக்காரர்களுக்காக 80 சதவீத மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது நியாயமா?
பிரதமரின் நடவடிக்கை கருப்பு பண ஒழிப்பில் இதுவரை யாரும் எடுத்திராத முயற்சி. பிரதமர் மோடியின் அறிவிப்பு பொருளாதாரத்தை உயர்த்தும் என்பது நிச்சயம். பணம் எடுக்க முடியாமல் தவிக்கும் மக்களின் பிரச்சினையை மத்திய அரசு விரைவில் தீர்க்க வேண்டும். ஒருநோக்கம் பெரிதாக இருக்கும் போது பாதிப்பு இருக்கும். ஆனால், பாதிப்பு பெரிதாக இருக்க கூடாது” இவ்வாறு அவர் பேசினார்.