புதுடில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டதன் மூலம் நிழல் பொருளாதாரம் ஒழிக்கப்பட்டு, வெளிப்படையான பொருளாதாரம் வலுப்பெறும் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் கூறியுள்ளார்.
டில்லி வந்துள்ள பில்கேட்ஸ் பிரதமர் மோடியை சந்தித்தார். தொடர்ந்து பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பில்கேட்ஸ் பேசினார்.
இந்தியா முயற்சி :
அவர் பேசியதாவது: அடுத்து வரும் சில வருடங்களில், இந்தியா டிஜிட்டல் மயமான பொருளாதாரமாக மாறும். இது அளவில் மட்டும் அல்லாமல், சதவீதமும் அதிகரிக்கும். இந்திய அரசு உள்கட்டமைப்பு, கட்டடங்கள், திறமையான சந்தைகளை உருவாக்குவதுடன், நிலம் மற்றும் தொழிலாளர் பிரச்னைகள, வரி வகிதங்கள் ஆகியவற்றில் உள்ள பிரச்னைகளை கவனிக்க வேண்டும். ஜி.எஸ்.டி., கொண்டு வந்தது சிறந்த நடவடிக்கை தான். ஆனால், இது துவக்கம் மட்டுமே. சர்வதேச பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என மட்டும் இந்தியாவை உலக நாடுகள் பார்க்கவில்லை. சர்வதேச சவால்களை புதிய கண்டுபிடிப்புகள் மூலம் தீர்க்க வேண்டும் என தான் விரும்புகின்றன. இதற்கு முன் செய்யாத பல திட்டங்களை செய்து இந்தியா முயற்சி செய்கிறது. தற்போது, பெரிய பிரச்னைகளை தீர்க்கும் அளவுக்கு திறமை பெற்ற அரசை இந்தியா பெற்றுள்ளது என்றார்.
English Summary:
Abolition of the shadow economy is derived withdraws bill, Microsoft founder Bill Gates as an open economy has strengthened.Bill Gates came to Delhi where he met Prime Minister Modi. Bill Gates spoke at a meeting of Prime Minister and Ministers.