திருப்பரங்குன்றம் உள்பட மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் எந்தவித ஆரவாரமின்றி அமைதியாக முடிந்தது.
முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது, செல்லாத ரூபாய் நோட்டுப் பிரச்னை போன்றவற்றால் இடைத் தேர்தல் களையிழந்ததாக தேர்தல் பணியில் ஈடுபட்ட கட்சியினர் கருத்துத் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 2008-ஆம் ஆண்டு திருமங்கலம் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்கு முழுமையான அளவில் பணம் விநியோகம் செய்யப்பட்டது. இது "திருமங்கலம் ஃபார்முலா' என்று அழைக்கப்பட்டு நாடு முழுவதும் பேசப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நடைபெற்ற அனைத்து இடைத் தேர்தல்களும் பரபரப்பாகவே நடந்தன. கடந்த 2006 முதல் 2011 ஆண்டு வரையிலான காலத்தில் நடந்த 11 இடைத் தேர்தல்களிலும் ஆளும்கட்சியான திமுக வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து, அதிமுக ஆட்சிக் காலத்திலும் அனைத்து இடைத் தேர்தல்களிலும் அந்தக் கட்சியே வென்றது. ஒவ்வொரு தேர்தலின்போதும் தலைவர்களின் தேர்தல் பிரசாரம், பண விநியோகம், கட்சித் தலைவர்களின் புகார்கள் என தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக இருக்கும்.
ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தாலே எகிறும் பரபரப்பு இப்போது மூன்று தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் காணப்படவில்லை.
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் தேர்தல் திருவிழா எந்த விறுவிறுப்பும் இல்லாமல் முடிந்துள்ளது. குறிப்பாக, பணம், பரிசுப் பொருள்கள் விநியோகப் புகார்களால் பொதுத் தேர்தல் நிறுத்தப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூரிலும் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அப்போது முதல் வாக்குப் பதிவு முடியும் வரையில் எந்தவொரு புகாரும் எந்தக் கட்சியாலும் தெரிவிக்கப்படவில்லை. இது தேர்தல் ஆணைய அதிகாரிகள் முதல் அனைவர் தரப்பிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரதான பிரச்னைகள் காரணம்: முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது, செல்லாத ரூபாய் நோட்டுகளால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு போன்ற காரணங்கள் தேர்தல் களத்தின் பக்கம் திரும்ப விடாமல் செய்திருப்பதாக கருத்துக் கூறப்படுகிறது.
இடைத் தேர்தலை ஊடகங்கள்தான் பெரிதுபடுத்தவில்லையே தவிர, தேர்தல் களம் சூடாகவே இருந்தது. வழக்கமான பிரசாரம், வாக்கு சேகரிப்பு என்றே தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தோம் என்றார் ஆளும்கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர். ஆனாலும், கடந்த கால தேர்தல்கள், இடைத் தேர்தல்களில் இருந்த கடுமையான அனல், இந்தத் தேர்தலில் பாதியளவுக்குக் குறைந்தது என்பது மட்டும் உண்மை.
English Summary : Thiruparankundram including the three blocks to the election without fanfare, quietly ended.