பரூச் : காங்., கட்சித் தலைவர்கள் பதுக்கி வைத்திருந்த ரூ.12 லட்சம் கோடி கறுப்புப் பணம் ஒரே நாளில் வெற்றுக் காகிதங்களாக மாற்றிவிட்டது என பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சிறு அவதி:
குஜராத் மாநிலம், பரூச் பகுதியில் நடந்த கூட்டுறவு வங்கி தொடக்க விழாவில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது: அறுவை சிகிச்சைக்கு பின் காயம் ஆறும் வரை சிறிது வலி இருக்கும். அதுபோலவே கறுப்பு பணத்திற்கு எதிராக பிரதமர் மோடி மேற்கொண்ட நடவடிக்கையும் மக்களுக்கு சிறு அவதியை தரலாம். ஆனால் இது பின்னாளில் நாட்டிற்கு அதிக பலன்கள் அளிக்கும். அத்தியவாசியப் பொருட்கள் முதல் அடுக்குமாடி குடியிருப்பு வரை அனைத்து விலையும் குறையும்.
காகிதங்களான பதுக்கல் பணம் :
ஊழலில் மூழ்கி திளைத்த காங்., உள்ளிட்ட எதிர்கட்சிகள், பிரதமரின் இந்த அதிரடி நடவடிக்கையை எதிர்க்கின்றன. தங்களது ஆட்சியில் 2ஜி, காமன்வெல்த், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு, ஆதர்ஷ் குடியிருப்பு ஒதுக்கீடு, ராணுவ விமான ஒப்பந்தங்கள் என அனைத்து ஊழல்கள் வாயிலாக காங்., தலைவர்கள் ரூ.12 லட்சம் கோடி பணத்தை முறைகேடாக சேர்த்தனர். பதுக்கி வைத்திருந்த அந்த பணம் முழுவதும், பிரதமர் மோடியின் அறிவிப்பால் ஒரே நாளில் வெற்றுக் காகிதங்களாகின.
‛சொகுசு கார்' ராகுல்:
மோடியின் இந்த அதிரடி நடவடிக்கையால் காங்., ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்., சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் சிக்கி தத்தளிக்கின்றன. ரூ.4 ஆயிரத்தை வங்கியில் மாற்ற, ரூ.4 கோடி மதிப்புடைய காரில் வரும் ராகுல், சாமானிய மக்களின் நலன் குறித்து பேசுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.