ஒருவர் தன்னுடைய பெயரால் சொத்து வாங்குவதையோ, வணிகம் செய்வதையோ குறைத்துக் கொண்டு, மனைவி, மகள் போன்ற மிக நெருங்கிய குடும்ப உறுப்பினர் அல்லாமல் வேறொருவர் பெயரில் செய்யும்போது அந்த இன்னொரு நபர் பினாமியாகி விடுகிறார். அசையும் பொருளாக இருந்தாலும் சரி, அசையா பொருளாக இருந்தாலும் சரி, இப்படி இன்னொருவர் பெயரில் வாங்கினாலே அது பினாமி எல்லைக்குள் வந்துவிடும்.
ஆரம்ப காலத்தில், பாசத்தை வெளிக்காட்டும் விதமாக மனைவி, பிள்ளைகள் பெயரில் குடும்பத் தலைவர் சொத்துக்கள் வாங்குவது நடந்தது. அதாவது, மிகவும் நம்பகமான குடும்ப உறுப்பினர்கள் பெயரில் சொத்துகள் வாங்குவார்கள்.
பின்னர், கடன்காரர்களை ஏமாற்ற, வரிஏய்ப்பு செய்ய, லஞ்சம், ஊழல் மூலம் சம்பாதித்ததை கணக்கில் காட்டாமல் மறைக்க, நீதிமன்றத்தில் திவால் நோட்டீஸ் கொடுக்க என பல காரணங்களால் குடும்ப உறவு அல்லாத ஆட்களின் பெயரில் சொத்து வாங்குவது அதிகரித்தது. இப்படி குடும்ப உறவு இல்லாத மற்றவர்கள் பெயரில் சொத்து வாங்குவதுதான் பினாமி சொத்து ஆகும்.
பினாமி பரிவர்த்தனை தடுப்பு திருத்த மசோதாவின் சிறப்பம்சங்கள்:
₹ ஜூலை 2016ல் மக்களவையிலும், ஆகஸ்ட் 2016ல் மாநிலங்களவையிலும் நிறைவேறியது.
₹ 1988ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் பல திருத்தங்களுடன் புதிய மசோதா நிறைவேற்றம்.
₹ சொத்து தனது பெயரில் இருந்தால் சிக்கல் வரும் என்பதால் மற்றொருவரை உரிமையாளராக காட்டுவதே பினாமி முறை.
₹ மனைவி அல்லது வாரிசுகள் பெயரில் சொத்து இருந்து அதற்கு உரிய கணக்கு காட்டப்பட்டால் அது பினாமி சொத்தாக கருதப்படாது.
₹ பழைய சட்டத்தில், ஒன்பது பிரிவுகளும், புதிய சட்டத்தில் 71 பிரிவுகள் உள்ளன.
₹ மத அமைப்புகள் பெயரில் உள்ள சொத்துக்களுக்கு விலக்கு அளிக்கும் சட்டப் பிரிவும் இடம்பெற்றுள்ளது.
₹ பழைய சட்டத்தின்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம், மூன்றாண்டு சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும்.
₹ புதிய சட்டத்தின் படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு சிறை மற்றும் சொத்தின் நியாயமான சந்தை மதிப்பில் 25% அபராதம் விதிக்கப்படும்.
₹ பினாமி சொத்துகளை பறிமுதல் செய்ய மத்திய அரசுக்கு சட்ட ரீதியான உரிமை உண்டு.
₹ வருமான சுய அறிவிப்பு திட்டத்தின் கீழ் பினாமி சொத்துக்களை பற்றி தகவல் அளிப்பவர்கள் மீது விசாரணை நடத்தப்படாது என்ற அறிவிப்பு 2016 செப்டம்பருடன் முடிந்தது.
₹ கறுப்புப் பண புழக்கத்தை தடுக்கும் இந்த சட்டம் நவம்பர் 1 முதல் அமலுக்கு வந்தது.
₹ பினாமி பரிவர்த்தனைகளை சமாளிக்க ஒய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை உள்ளடக்கிய மேல்முறையீட்டு தீர்ப்பாயம் நிறுவப்படும்.
₹ பினாமி சொத்து தொடர்பான விசாரணைகள் வரும் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு.
English Summary:
Acquire the property in his name, at the expense of doing business, wife, daughter, a very close family member, such as when someone other than the people in the name of another person, is named as Phoney. Whether movable object, whether immovable object, such as the name of phoney it will come.