கடந்த 8ம் தேதி இரவு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார். அது குறித்து தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்டுள்ளார்.
பிரதமர் மோடி கறுப்பு பணத்தை ஒழிக்கப்போவதாகக் கூறிக்கொண்டு நாட்டில் புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு வெளியிட்டார்.
இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர், மேலும் நாட்டில் சிறு, குறு தொழிலதிபர்கள், வியாபாரிகள் ஆகியோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதனால் மோடியின் அறிவிப்புக்கு முதலில் வரவேற்பு தெரிவித்த பலர் அதனை பின்னர் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர்.
நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து 6 நாட்களாக கடும் அமளியில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தை இயங்கவிடாமல் செய்துவருகின்றனர்.
எனவே தற்போது, பிரதமர் மோடி செல்லாத ரூபாய் நோட்டுகள் அறிவிப்பு குறித்து, NM app என்னும் பிரதமர் மோடியின் அப் மூலம் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், NM appல் செல்லாத நோட்டுகள் அறிவிப்பு குறித்து பத்து கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை,
1. இந்தியாவில் கறுப்பு பணம் உள்ளது என நீங்கள் நினைக்கிறீர்களா?
2. தீயசக்திகளான ஊழலும், கறுப்பு பணமும் ஒழிக்கப்படுவது தேவை என நினைக்கிறீர்களா?
3. மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து உங்களுடைய மதிப்பீடு என்ன?
4. ஊழலுக்கு எதிராக மோடி அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
5. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடி அரசின் அறிவிப்பு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
6. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் கறுப்பு பணம், ஊழல் மற்றும் தீவிரவாதத்தை ஒழிக்க முடியும் என நினைக்கிறீர்களா?
7. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் மூலம் ரியல் எஸ்ட்டேட், உயர் கல்வி, மற்றும் மருத்துவம் ஆகியவை சாதாரண மனிதனுக்கும் எளிதாக கிடைக்கும் என நினைக்கிறீர்களா?
8. கறுப்பு பணம், ஊழல், தீவிரவாதம், போன்றவற்றை ஒழிக்க, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு உங்களை பாதித்ததா?
9. ஊழலுக்கு எதிராக போராடும் சிலர் கூட தற்போது கறுப்பு பணத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக நீங்கள் நம்புகிறீர்களா?
10. பிரதமர் மோடியிடம் தெரிவிக்க உங்களிடன் ஏதேனும் கருத்துக்கள் உள்ளதா?
இந்த கறுப்பு பணத்தை ஒழிப்பது குறித்தும் அதற்கு மோடி அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் NM appல் கேட்கப்பட்ட பத்து முக்கிய கேள்விகள் இவை தான் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary:
On the night of 8 to 500 and 1000 banknotes, and they will not last as the Prime Minister made the announcement. Has asked the public to comment on his Twitter page about it now.