டோக்கியோ:பிரதமர் மோடி, ஜப்பான் பயணத் தின் ஒரு பகுதியாக, அதிவேக புல்லட் ரயிலில் பயணம் செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, கிழக்காசிய நாடான ஜப்பானுக்கு, மூன்று நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்; அவர், ஜப்பான் மன்னர் அகிஹிட்டோவை சந்தித்து, இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசித்தார்.
இதன்பின், அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேயை, மோடி, சந்தித்து பேசினார்; அப்போது, இரு நாடு களிடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க, அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதைத் தொடர்ந்து, நேற்று, ஜப்பான் தலைநகர் டோக்கியோவை,கோபேவு நகருடன் இணைக் கும், புல்லட் ரயிலில், ஜப்பான் பிரதமர் ஷின் சோ அபே வுடன் மோடி பயணம் செய்தார். 'ஷின்கான்சன்' என்ற இந்த புல்லட் ரயில்,
மணிக்கு, 240 முதல் 320 கி.மீ., வேகத்தில் சென்றது. ரயிலில் ஜப்பான் பிரதமர் அபேவுடன் பேசியபடி பயணிக்கும் புகைப்படங்களை, சமூக வலை தளமான, 'டுவிட்டர்' பக்கத்திலும் பிரதமர் மோடி வெளியிட்டார்.
இதே ரயில், இந்தியாவில், மும்பை - ஆமதா பாத் இடையே அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள், 2018ல் துவங்குகிறது; 2023ல், புல்லட் ரயில்களை இயக்க திட்டமிடப் பட்டுள்ளது.
முன்னதாக, அந்நாட்டு தொழிலதிபர்களுடன், மோடி பேசினார். அப்போது, ''இந்தியா - ஜப்பான் இடையே
தொழில்உறவு அதிகரித்து வருகிறது;இருநாட்டு தொழில் நிறுவனங்களுக்கும்,இது பயனளிக்கும்,'' என்றார்.