புதுடில்லி:டில்லியில், பொதுமக்களை கடுமையாக பாதித்து வரும், காற்று மாசு பிரச்னையை தீர்ப்பதற்கு, குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுத்து, இரு நாட்களுக்குள் அதை தாக்கல் செய்யும்படி, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
டில்லியில், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இம்மாநிலத் தில் காற்றில் மாசு பிரச்னை, 17 ஆண்டுகளில் இல்லாத அளவு, உச்ச கட்டத்தை எட்டியுள்ள தால், டில்லியில், இன்று வரை, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. பிரச்னையை சமாளிக்க, சாலைகளில் தண்ணீர் தெளிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இப்பிரச்னை தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில், சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப் பாடு வாரியம் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்த போது, நீதி
பதிகள் உத்தரவிட்டதாவது:
இது போன்ற பிரச்னைகள் ஏற்படும் போது, அதற்கு தீர்வு காண, பேரிடர் மேலாண்மை திட்டம்
ஏதாவது, அரசிடம் உள்ளதா? இது போன்ற பெரிய பிரச்னைகளை சமாளிப்பதற்கான நடமுறைகள் என்ன?தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு குறித்து, அரசு கண்காணிக்கி றதா? வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதை குறைப்பதற்கு என்ன திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது?
ஹரியானா, பஞ்சாப், உ.பி., உள்ளிட்ட மாநிலங்க ளில் இருந்து, டில்லிக்கு ஏராளமான லாரிகள் வரு கின்றன. இந்த லாரிகள், கடைசியாக எங்கு செல்கின்றன என, தெரியவில்லை. லாரிகளின் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கு, டில்லி போலீசாரும், சுங்கச்சாவடி ஊழியர்களும் நடவடிக்கை எடுக்கின்றனரா?
இது போன்றகேள்விகளுக்கு எல்லாம் பதிலளிக்கும் வகையில், குறைந்தபட்ச பொது திட்டம் அல்லது பேரிடர் மேலாண்மை திட்டத்தை தயாரித்து, இரு நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், காற்று மாசு பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்படி, டில்லி, ஹரியானா,
பஞ்சாப் மற்றும் உ.பி., மாநில அரசுகளுக்கும், சம்பந்தப்பட்ட மாநகராட்சி அமைப்புகளுக்கும் உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கு, நாளை மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
காரணம் என்ன?
டில்லியில், கட்டுப்பாடுகள் இல்லாத வகையில், கணக்கற்ற வாகனப் பெருக்கம், அண்டை மாநிலங்களான, பஞ்சாப், ஹரியானா வில், விவசாயிகள், பயிர்க் கழிவுகளை ஏராள மாக எரிப்பதால் அங்கிருந்து பரவும் புகை, தீபாவளி பண்டிகையையொட்டி, மக்கள் ஆர்வத்துடன் வெடித்த பட்டாசு புகை, ஆகியவையே டில்லியில் காற்று மாசுக்கு காரணங்களாக கூறப்படுகிறது.