ஜல்லிக்கட்டு மீதான தடையை எதிர்த்து மதுரையில் ஐல்லிகட்டு ஆர்வலர்கள் காளைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை கண்டித்து, மதுரையில் ஐல்லிகட்டு ஆர்வலர்கள் காளைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
முன்னதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, ஜல்லிகட்டு காளைகளுடன் 40க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து ஜல்லிகட்டு போட்டிக்கான தடையை நீக்க வேண்டும் எனவும், பீட்டா அமைப்பை தடை செய்ய கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 40க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.