நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு சிறப்பு சட்டம் கொண்டு வரவில்லை எனில் பொங்கல் அன்று அனைத்து பகுதியிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என ஜல்லிக்கட்டு பேரவையினர் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் சரவணவேல் ராஜிடம் ஜல்லிக்கட்டு பேரவையினர் மனு அளித்தனர். அதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு நடத்தி வந்ததாகவும், நீதிமன்றம் தடை விதித்ததால் அதனை மதித்து வருகிறோம்.
எனினும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் புதிய சட்டம் கொண்டு வராவிட்டால், பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவோம் என்றனர்.
English Summary:
Jallikattu hold parliamentary session, the government did not come up with a special law to be held during Pongal jallikattu jallikattu Council declared all the area.