விஜயவாடா: ஆந்திராவில் உள்ள பிஆர் கண்டிரங்கா கிராம மக்கள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெணடுல்கரை கடவுள் அளவுக்கு புகழ்ந்து வருகின்றனர்.
தத்தெடுப்பு:
மத்தியில் பா.ஜ., அரசு பதவியேற்றதும், எம்.பி.,க்கள் அனைவரும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ராஜ்யசபா எம்.பி.,யான சச்சின் டெண்டுல்கர் ஆந்திராவில் உள்ள பி.ஆர்., கண்டிரங்கா கிராமத்தை தத்தெடுத்தார். இந்த கிராமத்தில் மீன் வளர்ப்பு மற்றும் கால்நடைகள் மேய்ச்சல் மூலம் தான் மக்கள் சம்பாதிக்கின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் படிக்க வேண்டுமானால் 150 கி.மீ.,தூரம் செல்ல வேண்டும். இந்த கிராமத்தை தத்தெடுக்க இரண்டு வருடத்திற்கு முன்பு சச்சின் இங்கு வந்த போது, கிராமம் சாலை வசதியின்றி சேறும் சகதியுமாக காணப்பட்டது. இந்த கிராமம் தற்போது சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்கள் அனைத்திற்கும் முன்மாதிரியாக உள்ளது. தரமான சாலைகள், 24 மணி நேரம் மின்சாரம், தெருவிளக்கு, விளையாட்டு மைதானம், சமூகக்கூடம், குழந்தைகளுக்கு பள்ளி என பல வசதிகள் சச்சின் முயற்சியால் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், சச்சின் செய்த பணிகள் காரணமாக நாங்கள் பெருமைப்படுகிறோம். இது சச்சினின் கிராமம். அவர் செய்த பணிகளுக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம் என்றார்.
கல்லூரி மாணவர் ஒருவர் கூறுகையில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் அனைவரும், எங்கள் பகுதியை போல் மாற வேண்டும் என விரும்புகின்றனர். எங்கள் கிராமத்தில் கழிவறை, மின்சாரம், தண்ணீர், தரமான சாலை மற்றும் நல்ல வீடுகள் கிடைத்துள்ளது என்றார்.
மற்றொரு கிராமவாசி கூறுகையில், சச்சின் இந்த கிராமத்தை தத்தெடுக்காவிட்டால், வளர்ச்சிப்பணிகள் அனைத்தும் கனவாகவே இருந்திருக்கும். எங்கள் வாழ்க்கையிலிருந்த இருளை சச்சின் அகற்றினார். அவர் கடவுளை போன்றவர் என்றார். இந்த கிராமத்தில் வளர்ச்சி பணிகள் முடிந்ததை தொடர்ந்து நெர்னூர் மற்றும் கோலாப்பள்ளி கிராமங்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிராமத்தில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை திறந்து வைக்க வந்த சச்சின் அப்போது பேசுகையில், கிராமத்தில் ஏற்பட்டள்ள மாற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது. திறந்த வெளி கழிப்பறை இல்லாத கிராமமாக இந்த கிராமத்தை அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். இங்கு கழிப்பறை கட்டப்பட்டதால், மக்கள்பல நோய்களிலிருந்து தப்பியுள்ளனர்.
English Summary:
PR kantiranka villagers in Andhra cricketer Sachin tendulkar has been praised by God.