இஸ்லாமாபாத்:''பாக்., ராணுவம் நேரடி போரு க்கு எப்போதும் தயாராக உள்ளது; உலகின் எந்த ராணுவத்திற்கும் சளைத்தது அல்ல,'' என, பாக்., ராணுவ தளபதி ரஹீல் ஷெரிப் கூறியுள்ளார்.
சமீபத்தில் நம் ராணுவம், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தி, பயங்கரவாத முகாம்களை அழித்தது.
'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' எனப் பெயரிடப்பட்ட இந்த துல்லிய தாக்குதல் சம்பவத்துக்கு பின், இந்திய எல்லையோர கிராமங்களில்,பாக்., ராணுவம் தாக்குதல் நடத்துவது அதிகரித்து உள்ளது.
இதற்கு பதிலடி தரும் வகையில், நம் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் நம் ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில், ஏழு பாக்., வீரர்கள் கொல்லப்பட்டனர்; அவர்களது இறுதி சடங்கில், பாக்., ராணுவ தளபதி ரஹீல் ஷெரிப் பங்கேற்றார்.இந்நிலையில்,அவர் கூறியதாவது:
உலகின் எந்த ஒரு ராணுவத்திற்கும், பாக்., ராணுவம் சளைத்தது அல்ல; எந்த ஒரு தாக்குதலை யும் எதிர்கொள்ளும் திறன் உடையது. தாய் நாட்டை காக்க, எங்கள் வீரர்கள், தாக்குதலை
துணிந்து சந்தித்து வருகின்றனர்.
எல்லையருகே பணியாற்றும் வீரர்களின் வீரம், பாராட்டத்தக்கது. நேரடி போருக்கும், பாக்., ராணுவம் தயாராக உள்ளது; அதிலும் வெற்றி பெறுவோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
English Summary:
'' Bach., Military Direct is always ready to battle; The world in which army not overwrought, '' as Bach., Said army chief rahil sheriff.