1914 - நவம்பர் 15
கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தவர், வி.ஆர்.கிருஷ்ணய்யர். சென்னை சட்டக் கல்லுாரியில் பட்டம் பெற்று, வழக்கறிஞராக பணிபுரிந்தார். தடை செய்யப்பட்ட பொதுவுடைமை இயக்கத்தினருடன் தொடர்பிருப்பதாக கூறி, பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கண்ணனுார் சிறையில் அடைக்கப்பட்டார்.கடந்த, 1952 சட்டசபை தேர்தலில், குத்து பரம்பா தொகுதியில் சுயேச்சையாக வென்று, சென்னை மாகாண உறுப்பினரானார். பின், கேரளாவின் தலசேரி சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று, சட்டம், உள்துறை, மின்சாரம், நீர்ப்பாசனம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.வரதட்சணை ஒழிப்பு சட்டத்தை, நாட்டிலேயே முதல் முறையாக, கேரளாவில் அறிமுகம் செய்தார். பின், அரசியலில் விலகி, வழக்கறிஞர் பணிக்கு திரும்பினார். 1968ல், உயர் நீதிமன்ற நீதிபதியானவர், 1973ல், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
அன்றைய பிரதமர் இந்திராவின், தேர்தல் வெற்றி செல்லாது என, தீர்ப்பளித்தார்; இதனால் தான், நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. 2014 டிச., 4ல் இறந்தார்.
வி.ஆர்.கிருஷ்ணய்யர் பிறந்த தினம் இன்று!