பெலகாவி: அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி மகன் திருமணத்துக்கு, முதல்வர் சித்தராமையா, தன் அமைச்சர் சகாக்களுடன், தனி ஹெலிகாப்டரில் சென்று மணமக்களை வாழ்த்தியது, சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சிறிய தொழில் துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி மகன் சந்தோஷ் திருமணம், நேற்று முன்தினம் நடந்தது. இத்திருமணம் ஆடம்பரமாக நடப்பதால், செல்ல மாட்டேன் என, முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார். இதே போன்று ஜனார்த்தனரெட்டி வீட்டு திருமணத்துக்கு செல்லாமல் இருந்தார். ஆனால், நேற்று காலை, பெலகாவியிலிருந்து, 80 கி.மீ., துாரத்திலுள்ள கோகாக்கில் உள்ள அவரது வீட்டுக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பரமேஸ்வர், கே.ஜே.ஜார்ஜ் ஆகியோர் தனி ஹெலிகாப்டரில் சென்றனர். இதற்காக, பெலகாவி சுவர்ணசவுதா வளாகத்தில், ஹெலிபேடு அமைக்கப்பட்டிருந்தது. திருமணம் முடிந்த மறுநாள் மணமக்களை ஆசிர்வதித்தனர்.
இதற்கு பெலகாவியில், ம.ஜ.த., மாநில தலைவர் ஹெச்.டி.குமாரசாமி கண்டனம் தெரிவித்து கூறியதாவது: அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலியின் மகன் சந்தோஷ் திருமணம் ஆடம்பரமாக நடத்தப்படுவதால் செல்ல மாட்டேன் என, முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார். ஆனால், ஹெலிகாப்டரில் சென்று, அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி மகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது ஆடம்பரமில்லையா? நான் முதல்வராக இருந்த போது, அரசின் செலவில் ஹெலிகாப்டரில் சென்றது கிடையாது. தற்போது பதவியில் உள்ளவர்கள், தங்கள் பயணத்துக்கு, அரசு செலவில் ஹெலிகாப்டரை பயன்படுத்தி கொள்கின்றனர். ஒருபுறம் வறட்சியால் விவசாயிகளும், மறுபுறம், ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் பலரும் பணம் இன்றியும் தவிக்கின்றனர். இந்த வேளையில், ஆட்சியில் இருப்பவர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்கின்றனர். தங்கள் வீட்டு திருமணத்தை, பல கோடி செலவழித்து செய்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சரின் ஆடம்பர திருமணத்துக்கு செல்லவில்லை. அவர் வீட்டுக்கு சென்று மணமக்களை ஆசிர்வதித்தேன். வீட்டுக்கு கூட செல்ல கூடாதா? சட்டசபை கூட்டத்தொடர் இருந்ததால், அவசரமாக வர வேண்டியிருந்தது. அதனால் ஹெலிகாப்டரில் பயணித்தேன்.
சித்தராமையா, முதல்வர்
மக்கள் வறட்சியால் பாதித்துள்ள நிலையில், முதல்வர் சித்தராமையா, அமைச்சரின் மகன் திருமணத்துக்கு ஹெலிகாப்டரில் எப்படி செல்லலாம்?
English Summary:
Minister Ramesh jarkiholi son's wedding, the Chief Minister Siddaramaiah, his ministerial colleagues, couple greeted the helicopter alone, triggered controversy.