முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நிலையில், அவரது நேரடி கண்காணிப்பு, அறிவுரைகள், அறிக்கை, பிரசா ரம் இல்லாமல் இடைத்தேர்தலை சந்திக்கும் அ.தி.மு.க.,வினருக்கு இது ஒரு வித்தியாச மான இடைத்தேர்தல். மூன்று தொகுதிகளிலும் நிர்வாகிகள், அமைச்சர்கள் முகாமிட்டு தேர்தல் பிரசாரக் களத்தில் கடுமையாக உழைக்கின்றனர்.
திருப்பரங்குன்றம் தொகுதி பிரசாரத்திற்கு வந்த அ.தி.மு.க., செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைசெல்வன் அளித்த சிறப்பு பேட்டி.
* முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் உள்ள நிலையில், அவரது நேரடி கண்காணிப்பு இல்லாமல் 3 தொகுதிகளிலும் தேர்தல் நடக்கிறதே?
அவரது நேரடி கண்காணிப்பில்தான் இத்தேர்தல் நடக்கிறது. அவரது அனுமதியுடனும்,ஒப்புதலு டனும்தான் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ள னர்.முதல்வர் ஜெயலலிதா கண் விழித்ததும் கேட்டது தமிழக மக்களை பற்றியும், கட்சியின ரையும் பற்றிதான். இப்படி தொடர்ந்து உழைத்து கொண்டிருக்கிற அவரை பார்த்து மருத்துவர்களே வியந்து போனார்கள்.
* ஜெ., ஆலோசனைப்படியே அறிக்கைகள் தயாராகுகிறதா?
அவரது நேரடி பார்வையில் தான் அறிக்கைகள், அரசு பணிகள், மக்கள் பணி, கட்சி பணிகள் நடக்கின்றன.
* தேர்தல் ஒத்திவைப்புக்கு காரணம் என புகார் கூறப்பட்ட செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சியில் மீண்டும் போட்டியிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதே?
அவர் மீதான புகார்கள் என்பது இட்டு கட்டியவை. இதுகுறித்து தேர்தல் கமிஷனிடம் அப்போதே அ.தி.மு.க., சார்பில் தெளிவுபடுத்தப் பட்டது.
* ஒட்டுமொத்த அ.தி.மு.க.,வினரும், ஓட்டு கேட்டு மூன்று தொகுதிகளிலும் முகாமிட்டுள் ளார்களே. வெற்றி கிடைக்காது என்ற பயமா?
கட்சியினரும், நிர்வாகிகளும் அவர்களாகவே
ஆர்வமாக வந்திருக்கிறார்கள். அது அவர்களது சொந்த விருப்பம். கட்சி தலைமை நிர்ப்பந்தம் காரணமாக வரவில்லை.
* திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க., வும், தி.மு.க.,வும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தகவல் வருகிறதே?
பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டிய நிலையில் அ.தி.மு.க., இல்லை. காரணம், 32 ஆண்டுகளுக்கு பின் ஆளுங்கட்சி மீண்டும் ஆளுங்கட்சியான வாய்ப்பை அ.தி.மு.க.,வுக்கு சட்டசபை தேர்தலில் மக்கள் வழங்கினர். முதல்வர் ஜெ.,யின் சாதனைகள் போதும், ஓட்டு கிடைத்துவிடும்.
தி.மு.க.,வினர் பணம் பட்டுவாடா செய்வது குறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் செய்வோம். அவர்கள் 'திருமங்கலம் பார்முலாவை' போல் 'திருப்பரங் குன்றம் பார்முலாவை' உருவாக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.
* கடந்த 2006ல் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.,வாக இருந்த போஸ், தொகுதிக்கு எதுவும் செய்ய வில்லை என்று குற்றச்சாட்டு உள்ள நிலையில், எப்படியாவது அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொகுதியில் அ.தி.மு.க., கூடுதல் கவனம் செலுத்துகிறதா?
திருப்பரங்குன்றம் அ.தி.மு.க.,வின் கோட்டை. இதில் எந்த கொம்பனும் ஓட்டை போட முடியாது. கடந்த தேர்தலில் 23 ஆயிரம் ஓட்டுவித்தியாசத்தில் இங்கு ஜெயித்தோம்.
இத்தொகுதியில் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில், போஸ் வெற்றி பெறுவது உறுதி. அவர் 2006ல் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, தி.மு.க., ஆளுங்கட்சி; அவரது கோரிக்கைகளை நிராகரித்தது. நலத்திட்டங்களை, கிடப்பில் போடப்பட்டது.
* நட்சத்திர பேச்சாளர் பட்டியலில், முதன்முறையாக ஜெ., பெயர் இடம் பெறவில்லையே?
ஜெ., இல்லாமல் கட்சி இல்லை. அவர்தான் கட்சி யின் உயிர்நாடி. உயிர் இல்லாமல் உடல் இயங்க முடியாது. இத்தேர்தல் மட்டுமல்ல, எல்லா தேர்தல் களிலும் அவர்தான் முகமும், முகவரியும்.
* அ.தி.மு.க., ஜெயித்தால் மேஜை தட்ட ஒரு எம்.எல்.ஏ., தி.மு.க., ஜெயித்தால் வெளிநடப்பு செய்ய ஒருவர் கிடைப்பார். இதனால் பா.ஜ.,வுக்கு வாய்ப்பு தாருங்கள் என்கிறாரேதமிழிசை?
அரசின் திட்டங்களை முதல்வர் ஜெ., அறிவிக் கும்போது அதை வரவேற்று மகிழ்ச்சியை தெரிவிப்பதுதான் மேஜை தட்டுதல். இதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் மக்கள் நலப்பணிகளில் மதவாதத்தை புகுத்துவதுதான் தவறு. அதை பா.ஜ., செய்கிறது. அக்கட்சி சிறுபான்மையினரின் முதுகில் அடிக்கிறது.
* ஜெ., சிகிச்சை பெறும் படத்தை வெளியிட வேண்டும் என கருணாநிதி கூறினார். இப்போது
அவர் சிகிச்சை பெறும் படத்தை வெளியிட வேண்டும் என அ.தி.மு.க., கேட்குமா?
கருணாநிதி அரசியல் நாகரிகமின்றி ஒரு பெண் முதல்வர் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறார் என்பதையும் பாராமல், அரசியல் செய்து அவரது புகைபடத்தை வெளியிட வேண்டும் என சொன்னார்.
இதற்கு உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கட்ஜூ கூட கண்டனம் தெரிவித்தார். இதே போல் கருணாநிதி சிகிச்சை பெறும் போட்டோ வும், சிகிச்சை முறையும் வெளிவரவில்லை என்பதை தி.மு.க.,வினர் உணர்ந்து கொண்டால் நல்லது.
* பிரசார வியூகங்களை எப்படி வடிவமைத்துள்ளீர்கள்?
மக்களை தினமும் சந்திக்கிறோம். நட்சத்திர பேச்சாளர்கள் பல இடங்களில் பேசுகிறார்கள். வீடு வீடாக திண்ணை பிரசாரம் செய்கிறோம். ஏற்கனவே திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க., வெற்றி பெற்ற தொகுதி. எனவே இத்தேர்தல் அதை புதுப்பிப்பதற்கான தேர்தல்.இவ்வாறு கூறினார்.
திருப்பரங்குன்றத்தில் 10 அமைச்சர்கள் ஏன்?
* திருப்பரங்குன்றம் தொகுதியில் 10 அமைச்சர் கள் முகாமிட்டுள்ளார்களே. எதிர்க்கட்சியினர் தவறு இழைத்துவிடக்கூடாது என்பதற்காக விழிப்போடு இருப்பதில் தவறு இல்லையே.
* மக்கள் நலக்கூட்டணி போட்டியிடவில்லை. தே.மு.தி.க.,விற்கும் வைகோ ஆதரவு தருவ தாக இல்லை. எனவே மக்கள் நலக்கூட்டணி யினரின் ஓட்டுக்கள் அ.தி.மு.க.,விற்கு கிடைக் குமா. எங்கள் பக்கம் இருக்கிற நியாயத்தை புரிந்துக்கொண்டு, வெற்றி பெறும் கட்சிக்கு அவர்கள் ஓட்டளிப்பது நல்லது.
* சுயேச்சை வேட்பாளர்கள் அ.தி.மு.க., பக்கம் சாய்கிறார்களே. நாங்கள் அழைக்காமல் அவர்க ளாகவே வருகின்றனர்.இவ்வாறு கூறினார்.