டோக்கியோ : ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.4 எனப் பதிவான இந்நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயங்கர நிலநடுக்கம் :
ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் ரிக்டரில் 7.4 என்ற அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. புக்குசிமாவுக்கு அருகாமையில் 20 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் காரணமாக டோக்கியோ வரை நிலஅதிர்வுகள் உணரப்பட்டதாகவும், 2 பேர் காயடைந்தள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுனாமி எச்சரிக்கை :
நிலநடுக்கம் காரணமாக புக்குசிமா மற்றும் மியாகி பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புக்குசிமாவில் அணு உலை அமைந்துள்ளதால் சுனாமி ஏற்பட்டால் பெரும் விளைவுகள் ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அச்சம் :
அணு உலையில் 1 மீ., உயரத்துக்கு சுனாமி தாக்கியதாகவும், இதனால் பாதிப்பு இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அணு உலையில் நீர் குளிர்ச்சி கட்டமைப்பின் மூன்றாவது உலை செயற்பாட்டை நிறுத்தியுள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டில் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியால் புக்குசிமா அணு உலை சேதத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
English Summary:
There was a terrible earthquake in Japan. The tsunami warnings were recorded as 7.4 In Richter by this earthquake.