புதுடில்லி:ரூபாய் நோட்டு விவகாரத்தில், எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்த சிவசேனா வை சமாதானப்படுத்த, அதன் தலைவர் உத்தவ் தாக்க
ரேவுடன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தொலைபேசியில் பேசினார்.
மத்திய அரசு, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்துள்ளது; இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
பார்லி.,குளிர்கால கூட்டத்தொடர், நேற்று முன்தினம் துவங்கியது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சி, எம்.பி.,க்களும், அரசை கண்டித்து அமளியில்ஈடுபட்டனர்; இது, பா.ஜ.,வுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
ரூபாய் நோட்டு விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக, ஜனாதிபதியை சந்தித்து, திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தலைமையில், சில கட்சி தலைவர்கள், மனு அளித்தனர்.
இதில், சிவசேனா எம்.பி.,க்களும் பங்கேற்றனர். இதனால், தே.ஜ., கூட்டணியில் இருந்து, சிவசேனா விலகுமோ என்ற சந்தேகம், பா.ஜ.,வுக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வுடன், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங், தொலைபேசியில் பேசினார். பத்து நிமிடம் நீடித்த இந்த பேச்சின் போது,அரசின் நிலைமையை, உத்தவ் தாக்கரேயிடம்,ராஜ்நாத் சிங் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.
மத்திய அரசு, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்ததை நாங்கள் எதிர்க்க வில்லை.பழைய நோட்டுகளை மாற்ற,கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று தான், கோரிக்கை விடுத்துள்ளோம். மக்களுக்கு ஏற் பட்டுள்ள பாதிப்புகளை நீக்க வேண்டும் என, வலியுறுத்துகிறோம்.
English Summary:
In the case of currency note, accompanied by the opposition to convince the SS, with its chief Uddhav Thackeray, the Union Home Minister Rajnath Singh spoke on the phone.