பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டுக்கு வரும்படி, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழிக்கு, மக்கள் நலக் கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.
பொது சிவில் சட்டத்தை எதிர்த்து, வரும், 14ல், சென்னையில் மாநாடு நடக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஏற்பாடு செய்துள்ள ,
இம்மாநாட்டில், ம.ந.கூ., தலைவர்கள் வைகோ முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொள்கின்றனர். மேலும், தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர், மனிதநேய மக்கள்கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
தி.மு.க., தலைவர் கருணாநிதியை அழைக்க திட்டமிட்டனர். ஆனால், அவர் உடல் நல பாதிப்பு காரணமாக, ஓய்வில் இருக்கிறார். எனவே, அவருக்கு பதிலாக, கனிமொழியை அழைத்துள்ளனர்.
இது குறித்து, தி.மு.க.,வினர் கூறியதாவது:
இந்த மாநாட்டில் பங்கேற்பதன் மூலம், மூன்று தொகுதி தேர்தலில், ம.ந.கூ., கட்சிகளின் ஆதரவை, தி.மு.க.,வுக்கு பெற முடியும் என, கனிமொழி கணக்கு போடுகிறார். அதனால், கருணாநிதி சம்மதத்துடன், மாநாட்டில்
பங்கேற்கலாம் என, எண்ணுகிறார். ஆனால், அதை ஸ்டாலின் விரும்ப மாட்டார். அவரது எதிர்ப்பை மீறி, கனிமொழியால் பங்கேற்க முடியுமா என்பது தெரியவில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.