புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில், காங்., சார்பில் போட்டியிட்ட முதல்வர், நாராயணசாமி, 11,144 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சட்டசபைக்கு முதன் முறையாக செல்லும் அவர், இன்று, எம்.எல்.ஏ.,வாக பதவியேற்கிறார். புதுச்சேரியில், 14வது சட்டசபைக்கான தேர்தல், மே 16ல் நடந்தது. காங்., - தி.மு.க., கூட்டணி, 17 இடங்களில் வென்று, ஆட்சியை பிடித்தது. எம்.எல்.ஏ., அல்லாத, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாராயணசாமி, ஜூன் 6ல், முதல்வராக பதவியேற்றார். காங்., சார்பில், நெல்லித்தோப்பு தொகுதியில் வெற்றி பெற்ற ஜான்குமார், முதல்வர் நாராயணசாமி போட்டியிட வசதியாக, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து,
நெல்லித்தோப்பு தொகுதிக்கு இடைத்தேர்தல், கடந்த, 19ல் நடந்தது. காங்., வேட்பாளர் முதல்வர் நாராயணசாமி, அ.தி.மு.க., வேட்பாளர், ஓம்சக்தி சேகர் உள்ளிட்ட எட்டு பேர் போட்டியிட்டனர். பதிவான ஓட்டுகள், நேற்று ஓட்டு எண்ணப்பட்டன. காங்., வேட்பாளர் முதல்வர் நாராயண சாமி, 18 ஆயிரத்து, 709 ஓட்டு களும்; அ.தி.மு.க., வேட்பாளர் ஓம்சக்தி சேகர், 7,565 ஓட்டுகளும் பெற்றனர். நாராயணசாமி, 11 ஆயிரத்து, 144 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக, தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதையடுத்து, நாராயணசாமி முதல்வர் பதவியை தக்கவைத்தார். நோட்டா, 334 ஓட்டுகளுடன், மூன்றாவது இடம் பிடித்தது. மற்ற ஆறு வேட்பாளர்களும், இரண்டு இலக்க ஓட்டுகள் மட்டுமே பெற்று டிபாசிட் இழந்தனர். சட்டசபை தேர்தலில், முதன் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நாராயணசாமி, எம்.எல்.ஏ.,வாக, இன்று காலை, 11:00 மணிக்கு பதவியேற்கிறார். சபாநாயகர் வைத்திலிங்கம், பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
முதல்வர் நாராயணசாமி, கடந்த, 2009 - 14ல் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்திய அரசில், பார்லி மென்ட் விவகாரம் மற்றும் பிரதமர் அலுவலக இணை அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary:
Nellithope constituency election, Cong., CM candidate, Narayanaswamy, won by a margin of 11,144 votes.