மதுரை: ''500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததன் மூலம், இந்திய பொருளாதாரம் தப்பியுள்ளது. கறுப்பு பண முதலைகள் மோடி மீது கோபத்தில் உள்ளனர்,'' என திருப்பரங்குன்றம் தேர்தல் பிரசாரத்தில், பா.ஜ., அகில இந்திய பொது செயலாளர் முரளிதரராவ் பேசினார்.
மதுரை அவனியாபுரம் பிரசன்ன காலனியில் சீனிவாசனை ஆதரித்து அவர் பேசியதாவது: தமிழகத்தில் நோட்டை நம்பும் கட்சிகள், ஓட்டை நம்பும் கட்சிகள் என இரு பிரிவுகள் உள்ளன. 500, 1000 ரூபாய் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததன் மூலம், நோட்டை நம்பும் கட்சிகள் சொல்லாது என அர்த்தமாகி விட்டது. சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் மதுக்கடைகள் குறித்து பேசினோம். ஏழைகளுக்கு உண்மையான சுதந்திரம் என்பது மதுக்கடைகள் இல்லாத போது தான் கிடைக்கும். மதுக்கடைகள் இருக்கும் வரை நாடு வளர்ச்சியை நோக்கி செல்லாது. லோக்சபா தேர்தலில் நரேந்திரமோடி ஊழலற்ற அரசு தருவதாகவும், கறுப்பு பணத்தை ஒழிப்பதாகவும் வாக்குறுதி தந்தார். ஆட்சிக்கு வந்து பிரதமரானதும் கறுப்பு பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் செல்லாது என அறிவித்தார். இது ஏழைகள், நடுத்தரமக்களுக்கு எதிரானதல்ல. 2ஜி அலைக்கற்றை மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் செய்து கறுப்பு வைத்தவர்களுக்கு தான் எதிரானது. மோடி தன் அறிவிப்பின் மூலம் அந்த ரூபாய்களை சொல்லாக்காசாக்கி விட்டார்.பாகிஸ்தான் 500, 1,000 ரூபாய் கள்ள நோட்டு அடித்து நேபாளம், இலங்கை, வங்கதேசம் வழியாக ஏஜென்ட்கள் மூலம் இந்தியாவிற்குள் அனுப்புகிறது. இதனால் இந்திய பொருளாதாரம் ஆபத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. அவை செல்லாது என பிரதமர் அறிவித்ததன் மூலம் பொருளாதாரம் தப்பியுள்ளது. கறுப்பு பண முதலைகள் மோடி மீது கோபத்தில் உள்ளனர். சாமான்ய மக்களை போல காங்., துணை தலைவர் ராகுலையும் ஏ.டி.எம்., சென்று பணம் எடுக்க வைத்துள்ளார் பிரதமர்.தமிழகத்தின் முக்கிய பயிராக ஊழலை தி.மு.க., அ.தி.மு.க., வளர்த்து விட்டுள்ளன. மணல், மலை மற்றும் கிரானைட் கொள்ளைகள் மூலம் இரு கட்சிகளும் கோடிக்கணக்கான பணம் வைத்துள்ளன. கட்சிகளை கருணாநிதி, ஜெயலலிதா தங்கள் குடும்ப கட்சிகளாக்கி விட்டனர். இந்த குடும்ப கட்சிகளை அகற்றினால் தான் ஊழலை அகற்ற முடியும், என்றார்.