கவுகாத்தி : அசாம் மாநிலத்தில் புதிய ரூபாய் நோட்டுகளை கொண்டு சென்ற வாகனம் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் டிரைவர் பலியாகி உள்ளார்.
அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வாராந்திர ஊதியம் வழங்குவதற்காக வங்கியில் இருந்து புதிய ரூபாய் நோட்டுகள் எடுக்கப்பட்டது. பின்னர் அந்த பணத்தை ஒரு வாகனத்தில் ஏற்றி பாதுகாப்பாக அங்குள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டது. தேயிலை தோட்டத்துக்கு, பணம் இருந்த வாகனத்தை டிரைவர் ஓட்டிச்சென்றார். அவருடன் பாதுகாவலர், தோட்ட தொழிலாளி ஆகியோரும் சென்றனர். திடீரென வழியில் அடையாளம் தெரியாத நபர், பணம் கொண்டு சென்ற வாகனத்தின் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
இதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். உடன் சென்ற 2 பேரும் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கி சத்தம் கேட்டு மக்கள் கூடியதால் அடையாளம் தெரியாத நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுபற்றி தகவல் அறிந்த அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் உரிய விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்யுமாறு போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
English Summary:
In the state of Assam on banknotes mystery person who brought the vehicle to the driver died in the crossfire.