இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் எல்லைக்குள் ஊருடுருவிய ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆஸிம் சலீம் தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை கூறியுள்ள
தாவது:
இந்தியாவைச் சேர்ந்த ஆளில்லா விமானம் ஒன்று, பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் சனிக்கிழமை மாலை 4.45 மணியளவில் ஊடுருவியது. இதனையடுத்து, அந்த ஆளில்லா விமானத்தை பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.
அந்த விமானத்தின் பாகங்கள் சேகரிக்கப்பட்டு தடயவியல் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
English Summary : Unmanned aircraft was shot down in India: Pakistan.