சென்னையில் ஓடும் ரயிலில் செல்ஃபி எடுத்த போது விபத்திற்குள்ளாகி காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை தேனாம்பேட்டை டாக்டர் தாமஸ் சாலை பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடந்த 13ம் தேதி அன்று தனது நண்பர்களுடன் கிண்டியில் இருந்து தாம்பரம் நோக்கி புறநகர் ரயிலில் சென்றிருக்கிறார்.
அப்போது பார்த்தசாரதி ரயிலில் தொங்கியவாறு செல்ஃபி எடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது தண்டவாளம் அருகில் இருந்த கம்பத்தில் மோதி அவர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து, பார்த்தசாரதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.