புதுடில்லி : ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்ட விவகாரம் தொடர்பாக பார்லி., இரு அவைகளின் எதிர்க் கட்சிகள் இன்று (நவம்பர் 21)காலை கூடி ஆலோசனை நடத்த உள்ளன.
கடும் அமளி :
பார்லி., குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 16-ம் தேதி துவங்கியது. கூட்டத்தொடர் துவங்கிய நாள் முதல், ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாபஸ் பெறுவது தொடர்பான மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. கடும் அமளி காரணமாக இருஅவைகளும் இன்றுவரை ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக பார்லி., இரு அவைகளின் எதிர்க் கட்சிகளும் இன்று காலை ஒன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளன. காலை 9.30 மணியளவில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. சுமார் 10 கட்சிகளின் உறுப்பினர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.,யும், அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான டேரக் ஓபிராயன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் திட்டம் :
இன்று நடைபெறும் பார்லி., கூட்டத்தில் ரூபாய் நோட்டு விவகாரத்தை எப்படி கொண்டு செல்வது என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. லோக்சபாவில் இன்று (நவம்பர் 21) முதல் மூன்று நாட்களுக்கு தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று பா.ஜ., தனது உறுப்பினர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary:
Barley issue of notes were withdrawn., Both Houses of the opposition parties on Tuesday (November 21) are holding a meeting in the morning.