தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், திமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 3 சட்டமன்ற தொகுதி தேர்தலிலும் திமுகவுக்கு வாக்களித்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட கட்சி தொண்டர்களுக்கும், தோழமை கட்சியினருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும்
குறிப்பிட்டுள்ளார்.
புதுவை நெல்லித்தோப்பு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கருணாநிதி தெரிவித்துள்ளார். தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது ஆச்சரியம் இல்லை என்று தெரிவித்துள்ள கருணாநிதி, நாளை விளையும் நன்மையை விட இன்று கைக்கு கிடைக்கும் வாய்ப்பை எண்ணி களிப்புறுவுது, ஆக்கப்பூர்வமான எதிர்காலத்துக்கு அடிப்படையாகாது எனவும் கூறியுள்ளார்.
செயற்கையான இந்த வெற்றி நீண்ட நாளைக்கு சிறப்பை தராது எனவும் கருணாநிதி கூறியுள்ளார்.
English Summary:
Thanjavur, Aravakurichi, Thirupparankundram lose the opportunity to win 3 seats, thanked the voters who voted for the DMK chief M Karunanidhi said that the party's over.