புதுடில்லி: டி.வி. சேனல் தடை விவகாரத்தில் மத்திய அரசை விமர்சிக்க காங்கிரஸ் கட்சிக்கு அருகதை இல்லை என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.
டி.வி., சானலுக்கு தடை:
நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக பதான்கோட் ராணுவ நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்ததற்காக என்.டி.டி.வி., இந்தியா தொலைகாட்சிக்கு மத்திய அரசு ஒருநாள் தடை விதித்தது. இதற்கு எதிர்கட்சியான காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. மத்திய அரசு சர்வாதிகாரத்துடன் ஊடக சுதந்திரத்தை முடக்குவதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் விமர்சனம்:
டில்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடந்தது. அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், " மத்திய அரசு ஊடக சுதந்திரத்தை பறித்து சர்வாதிகார மனோபாவத்துடன் நடந்து வருகிறது. பா.ஜ., ஆட்சியில் ஜனநாயகம் இருளில் மூழ்கி உள்ளது. எதிர்கட்சிகளின் கேள்விக்கு மத்திய அரசு பதில் அளிக்காமல் மெளனம் காக்கிறது"என்று கூறினார்.
21 சானல்களுக்கு தடை:
இந்நிலையில், காங்கிரஸ் விமர்சனத்திற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
டி.வி., சானல் தடை விவகாரத்தில் மத்திய அரசை விமர்சிக்க காங்கிரஸ் கட்சிக்கு அருகதை இல்லை. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் 21 டி.வி., சானல்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
எமர்ஜென்சி காலம்:
ராகுல் சொல்வதை போல் பா.ஜ., ஆட்சியில் ஜனநாயகத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மக்கள் இந்த விவகாரத்தை அரசின் நடவடிக்கையாகவே பார்க்கின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டது. அப்போது தான் ஜனநாயகம் முற்றிலும் சீரழிந்தது. எதிர்கட்சிகள், அரசை விமர்சித்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டன. ஊடகங்களுக்கு சென்சார் சிப் அமல்படுத்தப்பட்டு ஊடக சுதந்திரம் முடக்கப்பட்டது.
காங்கிரசுக்கு பயம்
ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியை இழந்து வரும் காங்கிரஸ் கட்சி அச்சத்தில் இவ்வாறு புழம்பி வருகிறது. மத்திய அரசு நாட்டின் பாதுகாப்பிற்கு முக்கியதுவம் கொடுக்கிறது. அதற்கு எதிராக செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆகையால், டி.வி., சானல் தடை விவகாரத்தில் மத்திய அரசை விமர்சிக்க காங்கிரஸ் கட்சிக்கு துளியும் அருகதை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்காலிக தடை நிறுத்தம்:
இதனிடையே, என்.டி.டி.வி., சேர்மன் பிரனாய் ராய், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவை இன்று சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின் போது தடையை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, என்.டி.டி.வி.,க்கு விதிக்கப்பட்ட தடை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.