ரூபாய் நோட்டு விவகாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு, சபையில், இரங்கல் தெரிவிக்க வேண்டுமென, எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை, அரசு ஏற்காததால், ராஜ்யசபாவில் கடும் அமளி ஏற்பட்டது. பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் மூன்று நாட்களுமே, ரூபாய் நோட்டு விவகாரத்திற்காக கடும் அமளியை சந்திக்க நேர்ந்தது. வார விடுமுறைக்கு பின், நேற்று பார்லிமென்ட் மீண்டும் கூடியது. ராஜ்யசபா கூடியதும், சபைத் தலைவர் ஹமீத் அன்சாரி, கான்பூர் ரயில் விபத்து குறித்து இரங்கல் உரை வாசித்தார். அனைவரும் மவுன அஞ்சலி செலுத்திய பின், எதிர்க்கட்சிகள் சார்பில் புதிய கோரிக்கை வைக்கப்பட்டது. ரயில் விபத்தில் இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் அதேவேளையில், 15 நாட்களாக, நாட்டின் பல்வேறு இடங்களில் பலர் உயிரிழந்து வருகின்றனர். ரூபாய் நோட்டு விவகாரம் பலரது உயிர்களை காவு வாங்கி வருகிறது. முதியவர்கள், விவசாயி கள்,தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள் என பல்வேறு தரப்பைச் சேர்ந்த, 70 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களும், இந்நாட்டின் குடிமக்கள் தான்; அவர்களுக்கும் சபையில் அஞ்சலி செலுத்த வேண்டும். இவ்வாறு எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ராஜ்யசபா துணை தலைவர் குரியன், ''ரயில் விபத்து குறித்து நோட்டீஸ் தரப்பட்டது. அதேபோல், மற்ற விஷயங்களில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க நோட்டீஸ் அளிக்க வேண்டும்,'' என கூறி, கோரிக்கையை ஏற்க மறுத்தார். மாயாவதி, சீதாரம் யெச்சூரி உட்பட பலரும், இதை, கடுமையாக எதிர்த்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் குலாநபி ஆசாத், ''வங்கிகள் முன் வரிசையில் நின்று உயிரிழக்கும் அப்பாவிகளுக்கு இந்த சபை அஞ்சலி செலுத்தக் கூடாதா,'' என, கேட்டார்.
அதற்கு பதிலளித்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது: ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த சம்மதித்துள்ளோம்; அதில் பங்கேற்று பேசுங்கள்; அப்போது அஞ்சலி செலுத்துங்கள். ஆனால், விவாத்திற்கு நீங்கள் தயார் இல்லை; அதனால் தான் அமளியில் ஈடுபடுகிறீர்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விவகாரத்தில், அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்த போது, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் அமைதியாக அமர்ந்திருந்தனர். சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடிய போது, மீண்டும் அமளி ஏற்பட்டது. அப்போது, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் இருக்கையில் இருந்து எழுந்து நின்றனர். அமளி அதிகமாகவே சபை ஒத்திவைக்கப்பட்டது.கேள்வி நேரம் துவங்கியபோது, அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, ''விவாதம் நடத்துவோம்; அஞ்சலி செலுத்துங்கள்,'' என, பலமுறை வலியுறுத்தினார்; எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொள்ளாததால், அமளி ஏற்படவே, இரண்டு முறை சபை ஒத்திவைக்கப்பட்டது.மதியம் சபை கூடியதும், ரயில் விபத்து குறித்து ரயில்வே இணையமைச்சர் ராஜன் கோகைன் அறிக்கை வாசிக்க எழுந்தார்.
அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ், எம்.பி., ஆனந்த் சர்மா பேசியதாவது: இவ்வளவு பெரிய விபத்து நடந்துள்ளது. ராஜ்யசபாவுக்கு கேபினட் அமைச்சர் சுரேஷ் பிரபு வந்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக, இணையமைச்சரை அனுப்பி, அறிக்கை வாசிக்க வைப்பது, சபையை அவமதிப்பதாக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
''இணையமைச்சரும் அமைச்சர் தான். அவர் அறிக்கை வாசிப்பதில் தவறில்லை,'' என, துணை தலைவர் குரியன் கூறவே, வாக்குவாதம் ஏற்பட்டது; பின், அறிக்கை வாசிக்கப்பட்டது. முடிவில் மீண்டும் அமளி ஏற்படவே, 3:00 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.மீண்டும் கூடிய போது, ரூபாய் நோட்டு விவாதம் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 'சபைக்கு பிரதமர் வர வேண்டும்' என, எதிர்க்கட்சிகளும், அதற்கு எதிர்ப்பாக, பா.ஜ., - எம்.பி.,க்களும் போட்டி போட்டு அமளியில் இறங்கவே, நாள் முழுவதும் சபை ஒத்திவைக்கப்பட்டது.
எதுவும் முடியவில்லை : ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக, லோக்சபாவில் நேற்று ராகுல் பேசுவதாக இருந்தது. ஒத்திவைப்பு தீர்மானம் கோரி, அ.தி.மு.க., சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. தொடர் அமளியால், எதுவும் நடக்காமல், நாள் முழுவதும் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.
English Summary:
Currency note to the victims in the case, the Council, to express condolences, the opposition's demands, the government has not accepted the Rajya Sabha on.