ஊழல், கருப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரசு தொடுத்துள்ள புனிதப் போருக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக தில்லியில் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்துக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. இந்த கூட்டத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பேசியபோது, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவு, பாஜக தலைவர்கள் உள்ளிட்டோருக்கு முன்கூட்டியே கசிய விடப்பட்டதாகவும், இது மிகப்பெரிய ஊழல் என்றும் குற்றம்சாட்டினர். அதேநேரத்தில், ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவது தொடர்பான முடிவை திரும்பப் பெறும்படி மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்தாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள், ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தின. ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ் பேசியபோது, மத்திய அரசின் நடவடிக்கை குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்த வேண்டும் என்றார்.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ஊழல், கருப்புப் பணம், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் பின்னணியில் இருக்கும் கள்ள ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றுக்கு எதிராக மத்திய அரசு புனிதப் போரைத் தொடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேச நலனுக்காக இந்த விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்துக் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது. கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்த கூட்டத் தொடரைப் போன்று, இந்த கூட்டத் தொடரும் சுமுகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
தேர்தல் முறை குறித்து விவாதம்: அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பதை எப்படி வெளிப்படையாக்குவது என்பது முக்கியப் பிரச்னையாக இருக்கிறது. தேர்தல்களுக்கு அரசு நிதியளிப்பதை எப்படி அமல்படுத்துவது? இதுகுறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் விவாதித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். இதுகுறித்து அரசியல் கட்சிகள் விவாதித்து ஒருமித்த முடிவுக்கு வர வேண்டும் என்றார் பிரதமர் மோடி.
அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப் பிறகு, குலாம் நபி ஆஸாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன. தொடர்ந்தும் ஒற்றுமையாக இருக்கும். எதிர்க்கட்சிகளிடையே நிலவும் ஒற்றுமையை உடைக்க மத்திய அரசு எந்த முயற்சி மேற்கொண்டாலும், அது வெற்றியடையாது.
கருப்புப் பணத்தை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. மக்களவைத் தேர்தலுக்கு முன்பு வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணம் மீட்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்தது. அந்த வாக்குறுதியை செயல்படுத்துவதில் மத்திய அரசு முழுவதும் தோல்வியடைந்து விட்டது.
ரூபாய் நோட்டுகளை செல்லாது என்ற அரசின் முடிவு, அவசர கதியில் எடுக்கப்பட்டது. இதனால் பொருளாதார ரீதியிலான குழப்பங்ககள் ஏற்படும். மத்திய அரசின் முடிவு, பாஜகவினர் உள்ளிட்டோருக்கு முன்கூட்டியே கசிய விடப்பட்டுள்ளது.
இதுமிகப்பெரிய ஊழல். இதுகுறித்து எந்த வகையிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து நாடாளுமன்றம் சிந்திக்க வேண்டும் என்றார்.
* நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கு பதிலளிக்கவும், எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது.