லக்னோ : உ.பி., முன்னாள் முதல்வர் ராம் நரேஷ் யாதவ்(90), உடல் நலக் குறைவால் நேற்று(நவ.,22) காலமானார்.
தலைவர்கள் இரங்கல் :
உ.பி., முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான ராம் நரேஷ் யாதவ், உடல் நலக் குறைவு காரணமாக லக்னோவிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ், உ.பி., கவர்னர் ராம் நாயக் மற்றும் ம.பி., முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வியாபம் முறைகேடு :
ராம் நரேஷ் யாதவ் ம.பி., மாநில கவர்னராக கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016 செப்., வரை பதவி வகித்திருந்தார். வியாபம் முறைகேட்டில் ராம் நரேஷ் யாதவ் மற்றும் அவரது மகன் ஷைலேசுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், ஷைலேஷ் கடந்த வருடம்(2015, மார்ச்) மர்ம மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary:
UP, former CM Ram Naresh Yadav (90), malaise yesterday (Nov., 22) passed away.