தமிழகத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் நடப்பு பருவத்தில், 11 ஆயிரத்து 946 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், உணவுத் துறையின் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதில், பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகள், புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் உணவு பொருள் வழங்கல் துறையின் மூலமாக பொதுமக்களிடமிருந்து இதுவரை 5 லட்சத்து 56 ஆயிரத்து 948 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 5 லட்சத்து 35 ஆயிரம் 972 மனுக்கள் மீது தீர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் விலையில்லா அரிசி திட்டத்திற்கு 3 மாதத்திற்கு தேவையான அரிசி கையிருப்பில் உள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், இதுவரை நடப்பு பருவத்தில் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் 11 ஆயிரத்து 946 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
English Summary:
946 thousand metric tonnes of paddy has been procured and food, Kamaraj, said the minister.