புதிய ரூபாய் நோட்டுகளை சரக்கு பெட்டக லாரிகளில் எடுத்து வருவதற்கு காலதாமதமாவதால், சரக்கு விமானத்தில் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதிய ரூபாய் நோட்டுகள் நாசிக், மைசூரில் இருந்து தமிழகத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. சரக்குப் பெட்டக லாரிகளில் வரும் இந்த பணம் ரிசர்வ் வங்கியின் சென்னை அலுவலகத்தில் இறக்கப்பட்டு, அனைத்து வங்கிகளுக்கும் பிரித்து அனுப்பப்படுகிறது.
சரக்கு பெட்டக லாரிகளில் ரூபாய் நோட்டு கொண்டு வருவதற்கு ஓரிரு நாள்கள் ஆவதால் பணம் பட்டுவாடாவில் தாமதம் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க சரக்கு விமானங்கள் மூலம் ரூபாய் நோட்டுகளை கொண்டு வர மத்திய அரசு அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதன் மூலம் சுமார் ஒரு மணி நேரத்தில் பணம் சென்னை வந்து சேர்ந்து விடும்.
இதன்படி, திங்கள்கிழமை முதல் இந்த வழிமுறைகள் பின்பற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-
ரிசர்வ் வங்கிக்கு பணம் தேவையான அளவு வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் சென்னையில் இயங்கும் 2 ஆயிரம் வங்கிக் கிளைகளுக்கு பிரித்து அனுப்புவதில்தான் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. விமானத்தில் எடுத்து வந்தால் தாமதம் இல்லாமல் விரைந்து வங்கிக் கிளைகளுக்கு அனுப்ப முடியும்.
முன்பு தனியார் வாகனங்களிலும் பணம் எடுத்து செல்லப்பட்டது. ஆனால் இப்போது அரசு வாகனங்களிலும், வங்கி கிளையில் இருந்து நேரடியாக வந்தும் பணங்களை எடுத்து செல்வதாலும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது என்றனர்.
English Summary : Decided to bring cargo aboard banknotes.The new banknotes Nashik, are brought to the state of Mysore. Container trucks coming this money to the Reserve Bank's Chennai office deployment, all banks divided transit.