நுகர்வோரை பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட சட்ட மசோதா, தற்போதைய பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தற்போது அமலில் உள்ள நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்துக்கு மாற்றாக, நுகர்வோர் பாதுகாப்பு சட்ட மசோதா - 2015, தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா, நுகர்வோர் உரிமைகள், பாதுகாப்பு, வாங்கும் பொருட்களின் தரம் மற்றும் சேவை குறைபாடு உள்ளிட்ட, பல்வேறு ஷரத்துகளை உள்ளடக்கியது. இந்த புதிய மசோதா, நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக, நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலர், ஹேம் பாண்டே கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது: ஊழியர் பற்றாக்குறை, பொருட்கள் சப்ளை செய்வதில் குறைபாடு, உணவுப் பொருள் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை, உணவுப் பொருள் சேவை துறை எதிர்கொண்டுள்ளது. இந்த விஷயத்தில், மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளில் முரண்பாடுகள் உள்ளன. இந்த பிரச்னைகளை அறிந்துள்ள மத்திய அரசு, அதற்கு தீர்வாக, புதிய சட்ட மசோதாவை உருவாக்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
English Summary:
Prepared legislation to protect consumers, is to be tabled in winter session of the current Parliament.