சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுந்து நிற்க பயிற்சி அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உடல் நலக் குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அப்பல்லோ மருத்துவர்கள் குழு, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல், சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இன்றுடன் அவர் 68வது நாளாக அப்பல்லோ மருத்துவமனையில் உள்ளார். இந்நிலையில் சிங்கப்பூரை சேர்ந்த பிசியோதெரபி நிபுணர் மேரி சியாங் ஜெயலலிதாவுக்கு நேற்று எழுந்து நிற்க பயிற்சி அளித்துள்ளார். மேலும் ஒவ்வொறு உறுப்புகளுக்கும் மேரி பயிற்சி அளித்துள்ளார்.
காலை 7.20 மணிக்கு மருத்துவமனைக்கு வந்த மேரி இரவு தான் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
முன்னதாக முதல்வர் நலமாக உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கடந்த 25ம் தேதி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English summary:
Singapore based physiotherapist Mary has given training to CM Jayalalithaa to stand on her feet.