காங்கிரஸ் கட்சியுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்கமாட்டோம் என்று பிஜூ ஜனதா தளத் தலைவரும் ஒடிஷா முதல்வருமான நவீன்பட்நாயக் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான மெகா கூட்டணியில் பிஜூ ஜனதா தளமும் சேரக் கூடும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் மகதாப் தெரிவித்திருந்தார். இதனால் காங்கிரஸுடன் பிஜூ ஜனதா தளம் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகின.
இது குறித்து பாலசோர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஒடிஷா முதல்வர் நவீன்பட்நாயக்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், காங்கிரஸுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
ஒடிஷா மக்களை காங்கிரஸ் கட்சியை ஒடிஷா மக்கள் நிராகரித்துவிட்டனர் என்றார். இருப்பினும் பிஜூ ஜனதா தளத்தின் மூத்த தலைவர்கள் சிலர், காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதனால் கட்சி தலைமை தமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
Friday, 4 November 2016
Home »
» காங்கிரஸுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் திட்டவட்டம்