வட மாநிலங்களை ஒப்பிடும் போது தென் மாநிலங்களில் வெறுப்பு அரசியல் அதிக அளவில் உள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடும் முதல்வர் நாராயணசாமிக்கு எதிராக பிரசாரம் செய்ய அனுமதி கோரி திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். கிருபாகரன், ஒரு கட்சிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்ய அவர்களுக்கு உரிமையுண்டு என்றும் ஆனால் எதிராக பிரச்சாரம் செய்வது என்பது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானது அல்ல என்றும் தெரிவித்தார். மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் வெறுப்பு அரசியல் காணப்படுகிறது என்றும், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்ய வேண்டும் என்கிற மனுதாரரின் வாதமே வெறுப்பு அரசியலைத்தான் முன் வைக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.
வட மாநிலங்களில் இருப்பது போல் தென் மாநிலங்களில் அரசியல் சுமூகமாகவும், நட்புடனும் இல்லை என கருத்து தெரிவித்த நீதிபதி கிருபாகரன், வெறுப்பு அரசியல், அவதூறு பேச்சு, அரசியல் கொலைகள், பிற கட்சியினர் மீதான தாக்குதல் ஆகியவற்றை அரசியல் கட்சி தலைவர்களே ஊக்குவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.
மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனநாயகம் சிறப்பாக செயல்பட வெறுப்பு அரசியலை ஒதுக்கி அரசியல் தலைவர்கள் சிறந்த அரசியல் சூழலை உருவாக்குவார்கள் என நீதிமன்றம் நம்புவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து திராவிட விடுதலை கழகத்தின் எதிர்ப்பு பிரச்சார கோரிக்கையை தேர்தல் அதிகாரி நிராகரித்தது சரியே என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.