அலகாபாத்: ''உ.பி., சட்டசபை தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கு எதிராக, பிரபல நடிகை ராக்கி சாவந்த் களமிறக்கப்படுவார்,'' என, மத்திய அமைச்சரும், இந்திய குடியரசு கட்சி தலைவருமான ராம்தாஸ் அதாவலே தெரிவித்தார்.
முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கும், உ.பி.,யில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல் குறித்து, மத்திய அமைச்சரும், இந்திய குடியரசு கட்சி தலைவருமான ராம்தாஸ் அதாவலே கூறியதாவது:பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம்; உ.பி., சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புகிறோம். தொகுதி பங்கீட்டில் முடிவு எட்டப்படாவிட்டால், 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தனித்து போட்டியிடுவோம். தலித் மக்களுக்காக போராடுவதாக கூறி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஏமாற்றி வருகிறார். சமீப காலமாக, அவர் தேர்தலில் போட்டியிடுவதில்லை. வரும் சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிட்டால், அந்தத் தொகுதியில், அவரை எதிர்த்து, சமீபத்தில், எங்கள் கட்சியில் இணைந்த, நடிகை ராக்கி சாவந்தை களமிறக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.