புதுடில்லி: அடுத்தாண்டில் சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட்டில், பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படும் என தெரிகிறது.
வருவாய் குறைவு :
ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: குறிப்பிட்ட சில ரயில் வழித்தடங்களில், சில சிறப்பு ரயில்களில், காலம், பயணிகளின் தேவை போன்ற அம்சங்களை வைத்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும், 'பிரீமியம் கட்டண' முறை அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், இத்திட்டத்தால், ரயில்வேத் துறையின் வருவாய் எதிர்பார்த்த அளவு அதிகரிக்கவில்லை.
மாற்றங்களால் பலனில்லை :
ரயில் கட்டண விகிதம் மற்றும் ரயில் கட்டணத்தை திருப்பித் தருவது தொடர்பான விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அப்போதும், பயணிகள் ரயில் பிரிவில் ஏற்படும் இழப்புகளை குறைக்க முடியவில்லை. நடப்பு நிதியாண்டின், ஜூலை - செப்டம்பர் காலாண்டில், சரக்கு ரயில் போக்குவரத்து வருவாயில் சரிவு ஏற்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, சரக்கு ரயில் கட்டணத்தை, இதற்கு மேலும் அதிகரிப்பது சரியாக இருக்காது என, ரயில்வே துறை கருதுகிறது.
பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்த திட்டம்:
இதனால், வருவாயை அதிகரிக்க, பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்துவதே சிறந்த வழியாக இருக்கும் என்ற முடிவுக்கு ரயில்வே வந்து உள்ளது. இதனால், அடுத்தாண்டு சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட்டில், பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. வருவாயை அதிகரிக்க, எல்லா ரயில்களிலும், பயணிகள் கட்டணம் உயர்த்தப்படும் என, தெரிகிறது. இவ்வாறு ரயில்வே வட்டாரங்கள் கூறின.