புதுடில்லி : முக்கிய அமைச்சர்கள் சிலருடன் பிரதமர் மோடி அவசரமாக ஆலோசனை நடத்த உள்ளார்.
கடும் எதிர்ப்பு :
பார்லி., குளிர்கால கூட்டத் தொடர் ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் இதுவரை ஆக்கப்பூர்வமாக எந்த விவாதமோ, மசோதா தாக்கல் உள்ளிட்டவைகளோ நடைபெறவில்லை. கூட்டத்தொடர் துவங்கியது முதல் நாள்தோறும் ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம் தொடர்பான பிரச்னையை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால், தொடர்ந்து இருஅவைகளும் அடுத்தடுத்து பலமுறை ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ரூ.500, 1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதை எதிர்த்து இன்று பார்லி., முன் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. பிரதமர் பார்லி.,யில் பதிலளிக்கவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றன.
அவசர ஆலோசனை :
இதனால் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை எப்படி சமாளிப்பது, கூட்டத் தொடரை சுமூகமாகவும், ஆக்கபூர்வமாகவும் எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசிப்பதற்காக அவசர கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டி உள்ளார். நிதியமைச்சர், தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், பார்லி., விவகாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களுக்கு இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
English Summary:
Some key ministers will hold consultations with the Prime Minister in a hurry.