நியூயார்க் : அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பை, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே சந்தித்துப் பேசினார்.
முதல் வெளிநாட்டு தலைவர் :
நியூயார்க்கில் உள்ள டிரம்ப் டவர் கட்டடத்தில் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பை, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு 90 நிமிடங்கள் நீடித்தது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு பின், அவரை சந்திக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவர் அபே என்பது குறிப்பிடத்தக்கது.
உறவு மேம்படும் :
டிரம்புடனான சந்திப்புக்குபின் செய்தியாளர்களிடம் ஷின்ஸோ அபே தெரிவித்ததாவது: ஜப்பான் - அமெரிக்கா இடையேயான சுமுகமான உறவுக்கு அடிப்படை, இரு நாடுகளிடையே நிலவும் பரஸ்பர நம்பிக்கையே. அந்த நம்பிக்கைக்கு உரிய தலைவராக டிரம்ப் திகழ்வார். இருநாடுகளுக்கிடையேயான உறவு மேம்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
32 தலைவர்களிடம்...
அதே நேரத்தில் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, டிரம்ப்பை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று டிரம்ப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை அதிபர்கள், பிரதமர்கள் என, 32 உலக நாடுகளின் தலைவர்களோடு டிரம்ப் தொலைபேசி மூலம் பேச்சு நடத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary:
US President-elect Donald Trump, Japanese Prime Minister Shinzo Abe met.