பெங்களூரு: கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி தனது மகள் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தினார். இதனை தொடர்ந்து அவருக்கு சொந்தமான நிறுவனம் மற்றும் இந்த திருமண நிகழ்ச்சிகளை செய்த ஒருங்கிணைப்பு நிறுவனம், கேட்டரிங், மல்டி மீடியா சேவை வழங்கும் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஆடம்பரம்:
கடந்த 8 ம் தேதி இரவு முதல் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டது. அப்போது, கர்நாடக முன்னாள் அமைச்சரும், சுரங்க மாபியாவுமான ஜனார்த்தன் ரெட்டி ரூ.500 கோடி செலவில் ஆடம்பரமாக மகளுக்கு திருமணம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரம் பேருக்கு மேல் கலந்து கொண்டனர். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மக்கள் வங்கிகளின் வரிசையில் நிற்கும் போது, ஜனார்த்தன் ரெட்டி ஏற்பாடு செய்த திருமணம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இது தொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் வருமான வரித்துறையிடம் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், ஜனார்த்தன் ரெட்டிக்கு சொந்தமான ஒபுலாபுரம் சுரங்க நிறுவனத்தில் வருமானத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இதனை தொடர்ந்து அவரது நிறுவனங்கள், திருமணத்திற்கு உதவிய நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: பெங்களூருவில் 7
இடங்களிலும் ஐதராபாத்தில் 3 இடங்களிலும் சோதனை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு அதிக பணம் செலவழிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிய வந்தது. இதனையடுத்து, கணக்கு வழக்குகள், ரசீதுகள், ஒப்பந்த திட்டங்கள் ஆகியவை சரியாக உள்ளதா என அதிகாரிகள் சோதனை செய்தனர். சிறப்பு சுவிஸ் டெண்ட்கள், ஆடம்பர சாதனங்கள், பல வகை உணவுகள், உள்ளிட்டவை ஏற்பாடு செய்த நிறுவனங்களிலும் சோதனை செய்யப்பட்டது. ஜனார்த்தன் ரெட்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சென்று, அங்குள தனக்கு தேவையானது உள்ளதா என்பது குறித்தும், அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்கள் அளவு குறித்தும் ஆய்வு செய்துள்ளார். அங்கும் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். நிறுவனங்கள் உரிமையாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்யப்பட்டது. அங்கு பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்தது தொடர்பாக விரைவில் தெரிவிக்கப்படும். இதன் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விரைவில் முடிவு செய்யப்படும் என்றார்.
English Summary:
Former Karnataka minister Janardhan Reddy held a lavish wedding of his daughter.