காற்றின் வேகம் மற்றும் திசை மாறியதால், வட கிழக்கு பருவமழை வலுவிழந்துள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை, நவ., 30 முதல், நான்கு நாட்களுக்கு பெய்து, ஒதுங்கிக் கொண்டுள்ளது. மேலும், மேற்கு பக்கமிருந்து வீசும் காற்றின் ஆதிக்கமும் தொடர்வதால், தென் தமிழகத்தின் அருகே கூடும் மேகக் கூட்டம், அந்தமானுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால், நன்றாக பெய்ய வேண்டிய வட கிழக்கு பருவமழை, மிகவும் வலுவிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, இந்திய வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது: எப்போதும் இல்லாத அளவுக்கு, நிலைமை மோசமாக உள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக பெய்ய வேண்டிய மழை, ஆங்காங்கே பெயரளவில் பெய்து வருகிறது. இதற்கு, வட கிழக்கிலிருந்து வீசும் காற்றின் வேகம் குறைவாகவும், வலுவின்றி இருப்பதுமே காரணம். ஆனால், வட கிழக்கு காற்றை தள்ளிச் செல்லும் அளவுக்கு, இந்திய பெருங்கடலில், மேற்கு பக்கமிருந்து வலுவான காற்று வீசுகிறது. இந்த நிலை மாறுமா என, நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். காற்றின் திசையும் மாறி, வட கிழக்கு காற்றுக்கு வலுவும் கிடைத்தால், மாநிலம் முழுவதும் பரவலான மழை கிடைக்கும். தற்போதைய நிலையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில், பரவலாக மழை இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். நேற்று காலையுடன் முடிந்த, 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகபட்சம், 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.