ஐதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், வசிக்க புதிதாக கட்டப்பட்ட ஆடம்பர வீட்டில் குண்டு துளைக்காத வகையில் குளியலறை அமைக்கப்பட்டுள்ளது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முதல்வருக்காக கண்ணி வெடி தாக்காத காரும் வாங்கப்பட உள்ளது.
தெலுங்கானா மாநில முதல்வராக இருப்பவர் சந்திரசேகர ராவ். அவரது மகன் ராமாராவ். இவர் தகவல் தொழில் நுட்பம், பஞ்சாயத்து ராஜ் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் நகர்ப்புற வளர்ச்சி என மூன்று துறைகளை கையாண்டு வருகிறார். எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட பல சந்திரபாபு நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தின.
ஆடம்பர பங்களா:
இந்நிலையில் பேகம்பட் பகுதியில், சந்திரசேகர ராவுக்காக சுமார் ஒரு லட்சம் சதுர அடியில் சந்திரசேகர ராவுக்காக புதிதாக வீடு கட்டப்பட்டு வருகிறது. இங்கு சந்திரசேகர ராவுக்காக குண்டுதுளைக்காத வகையில் குளியல் அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் இரண்டு அறைகள் அமைக்கப்படுகின்றன. ஒன்று சந்திர சேகர ராவுக்காகவும்,மற்றொன்று அவரது மகன் ராமராவுக்காகவும் அமைக்கப்படுகிறது. இந்த அறையில் விலை உயர்ந்த கண்ணாடிகள் பொருத்தப்படுகின்றன. இதன் விலை பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. மாநில உளவுத்துறையினரின் பரிந்துரைப்படி இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வீட்டிற்கு சந்திரசேகர ராவ் நாளை குடியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த பாதுகாப்பு:
இந்த வீட்டிற்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவது போல், மாநில போலீசார் பாதுகாப்பு வழங்க உள்ளனர். 50க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவர்கள் முதல்வர் இல்லத்தை தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதுடன், முதல்வரை பார்க்க வருவர்களிடமிருந்து மொபைல் போன், வாட்ச்சுகள் மற்றும் மின்னணு சாதனங்களை வாங்கி வைத்து கொள்வார்கள்.
English Summary:
TRS Chief Chandrasekhar Rao, housed in a newly built luxury home bath set bulletproof has created strong controversy. Takkata car is bought for the first mine explosion.