மரக்கேஷ் : கடந்த ஆண்டை விட 2016 வெப்பமான ஆண்டாக அமையும் என, ஐ.நா., தெரிவித்துள்ளது.
நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை:
கடந்த ஜன., முதல் செப்., வரை பதிவான உலக வெப்பநிலையின் அடிப்படையில், 2015ஐ விட, 2016 வெப்பமான ஆண்டாக அமையும் என உலக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் பதோலி என்ற இடத்தில் கடந்த மே மாதம் 51 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதுவே நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை.
கூடுதல் வெப்பம் :
நேற்று உலக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் 'கடந்த ஆண்டு பதிவை விட, சராசரியாக 1.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக நிலவும்' என தெரிவித்துள்ளது. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பதிவான வெப்பநிலையை ஆய்வு செய்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வெப்பமான ஆண்டு:
இந்த ஆண்டு தொடக்கத்தில் தென் ஆப்ரிக்காவின் பிரிட்டோரியாவில் 42.7 டிகிரியும், தாய்லாந்தில் ஏப்ரல் மாதத்தில் 44.6 டிகிரியும், இந்தியாவில் மே மாதம் 51 டிகிரியும், குவைத்தில் ஜூலை மாதம் 54 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானது. இவ்வாறு உலகநாடுகளில் ஜன., முதல் செப்., வரை பதிவான வெப்பநிலையை ஆய்வு செய்து, 2015ஐ விட, 2016 வெப்பமான ஆண்டாக அமையும் என உலக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2014ல் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வருகிறது