பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கும் ரஜினிகாந்த், கபாலி திரைப்பட வருமானம் குறித்து கணக்கு காட்ட முடியுமா என திரைப்பட இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் அமீர், இதுவரை எந்த விஷயத்திலும் குரல் கொடுக்காத ரஜினிகாந்த், தற்போது 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு வாய் திறக்க வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பினார்.
மேலும் கபாலி திரைப்பட டிக்கெட் என்ன விலைக்கு விற்பனை செய்யப்பட்டது என தெரியுமா? என்றும் அப்படத்தின் வருமானம் குறித்த கணக்குளை காட்ட முடியுமா என ரஜினிகாந்துக்கு இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பி உள்ளார்.