புதுடில்லி : ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்ட விவகாரத்தை பார்லி.,யில் எழுப்பி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், இப்பிரச்னை குறித்து காங்., துணைத் தலைவர் ராகுல் இன்று லோக்சபாவில் பேச உள்ளார்.
எதிர்க்கட்சிகள் திட்டம் :
பார்லி., கூட்டத்தொடர் துவங்கியது முதலே ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்ட விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் பார்லி., இரு அவைகளிலும் நடவடிக்கைகள் முடங்கி உள்ளன. ஏற்கனவே 2 நாட்கள் பார்லி., ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ரூபாய் விவகாரத்தை அடுத்து எப்படி எடுத்துச் செல்வது என்பது குறித்து எதிர்கட்சிகள் ஒன்று கூடி இன்று ஆலோசிக்க உள்ளன. அதே சமயம், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்களை எப்படி சமாளிப்பது என்பது குறித்து, பா.ஜ.,வும் வியூகம் வகுத்து வருகிறது.
ராகுலின் ேஹாம்ஒர்க் :
எதிர்க்கட்சிகள் அனைவரும் ஓரணியாக திரண்டு ரூபாய் நோட்டு விவகாரத்தில் எதிர்ப்பை காட்டி வரும் நிலையில், அந்த விவகாரம் குறித்து லோக்சபாவில் இன்று ராகுல் பேச உள்ளார். இதற்காக, இன்று அதிகாலையிலேயே டில்லியில் உள்ள 3 ஏ.டி.எம்.,களுக்கு ராகுல் நேரில் சென்றார். அங்கு வரிசையில் நின்ற மக்களிடம், அரசின் நடவடிக்கை குறித்து கருத்து கேட்டார். பார்லி., கூடுவதற்கு முன் காலை 10.30 மணியளவில் காங்., பார்லி., குழு கூட்டமும் கூடி, ராகுல் பேச வேண்டிய விஷயங்கள் பற்றி ஆலோசிக்க உள்ளது. கடந்த சில நாட்களாக டில்லியிலும், அதைத் தொடர்ந்து மும்பையிலும் ஏ.டி.எம்.,களுக்கு நேரில் சென்ற ராகுல், மக்களுடன் வரிசையில் நின்று பணம் எடுத்துச் சென்றார். மக்களின் கஷ்டங்களை பகிர்ந்து கொள்வதற்காகவே ஏ.டி.எம்.,க்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
English Summary:
Barley notes issue was withdrawn., Raised in the opposition enters the fray, the issue of the Cong., Rahul will speak in the Lok Sabha today.