ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவ தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான் ராணுவம், இன்றும் நவ்ஷேரா பகுதியில் தாக்குதல் நடத்தியது.
இது தொடர்பாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது: காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் நவ்ஷேரா செக்டாரில், இன்று காலை 8.45 மணி முதல் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவத்தினரும் உடனடியாக பதிலடி கொடுத்தனர். பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய தரப்புக்கு சேதம் ஏற்படவில்லை.
இதுவரை 100 முறை :
நேற்று பூஞ்ச் மாவட்டம் மெந்தார் செக்டார் பகுதியில், மான்கோட், பால்கோட் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. கடந்த 6ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 5 பேர் காயமடைந்தனர். சர்ஜிக்கல் தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் ராணுவம் இதுவரை 100 முறை அமைதி ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அதிகாரி ஒருவர் கூறினார்.