ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்கப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி, ரூபாய் நோட்டு மாற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக த.வெள்ளையன் குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில அளவிலான மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அப்பேரவையின் தலைவர் வெள்ளையனின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய அரசின் நடவடிக்கையால் வணிகர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்தும், அதனை சமாளிக்கும் விதம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
சில்லறை வணிகத்தை ஒழித்து பொதுமக்கள் அனைவரும் பெரிய வணிக வளாகங்கள் மற்றும் ஆன்லைன் மூலம் அந்நிய நாட்டு பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி ரூபாய் நோட்டு மாற்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும், இதனை கண்டித்து விரைவில் கடைகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்களும் இந்நேரத்தில் அந்நிய நாட்டு பொருட்களை தவிர்த்து, உள்நாட்டு தயாரிப்பு பொருட்களையே வாங்க வலியுறுத்தி, ஜனவரி 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை சென்னையில் விழிப்புணர்வு பயணம் நடத்தப்படும் என்றார்.

English Summary:
Modi to encourage online business, have been taken to change the bill is accusing tavellaiyan.