லிமா : டொனால்டு டிரம்பை மோசமானவராக கருத வேண்டாம் என்று லத்தீன் அமெரிக்கா மற்றும் உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தி உள்ளார்.
ஆசிய பசிபிக் பொருளாதார மாநாடு தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் நடைபெற்று வருகிறது. தலைநகர் லிமாவில் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்டார். லிமாவில் இளைஞர்களுடன் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் ஒபாமா பேசுகையில், வெள்ளை மாளிகையில் பணியாற்ற அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்புக்கு தகுதி இல்லை என்ற தவறான முடிவுக்கு வர வேண்டாம். டிரம்பை மோசமானவராக கருத வேண்டாம். நிர்வாகம் எப்படி நடத்துகிறார் என்பதை பார்க்கும் வரை காத்திருங்கள்.
உலக நாடுகள் அமைதியாக, செழிப்புடன் ஒற்றுமையாக வாழும் பொருட்டு அவருடன் நிர்வாகம் இருக்கிறதா? இல்லையா என்று பார்த்து பின்னர் தீர்மானியுங்கள். புதிய அதிபர் குறித்து உலக நாடுகள் உடனடியாக எந்த முடிவுக்கும் வர வேண்டாம். இது உலக நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு முக்கியமானதாகும் என்றார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் டிரம்ப்பை கடுமையாக விமர்சித்து வந்த ஒபாமா, தேர்தலுக்கு பிறகு அவருக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary:
The conference will be held in the capital, Lima, attended by US President Obama. Do not consider that bad drum. Wait until you see how the administration treats.