
அரசியலுக்கு வந்தது குறித்து, நமீதா கூறியதாவது: நான் அரசியலுக்கு வந்த போது, 'ஏன் திடீர் அரசியல் பிரவேசம்' என, பலரும் கேள்வி எழுப்பினர். குழந்தைகளுக்கு எதிரான சமூக அவலங்கள் அதிகரித்து வருகின்றன. கல்விக்கான செலவும், அதிகரித்து விட்டது; இதை தடுக்கவே, அரசியலுக்கு வந்தேன். பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு, கல்வி, வசதியை சம்பாதித்து தருகின்றனர்; சமூகத்தை பற்றியும் கற்றுத் தர வேண்டும். முக்கியமாக பாலியல் தொல்லைகளில் இருந்து, குழந்தைகள் தப்பிக்க, தொடுதலில், நல்லது கெட்டதை சொல்லித் தர வேண்டும். குழந்தைகளுக்கான சமூக சீர்கேடுகளை தடுக்க வேண்டும். இதுவே, என் தற்போதைய பணி.இவ்வாறு அவர் கூறினார். மீண்டும் நடிக்க வந்துள்ள நமீதா, மலையாளத்தில் மோகன் லாலுடன் நடித்த, புலி முருகன் படம், 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. இதை தொடர்ந்து ராசியான நடிகையாக மாறிய நமீதா, மலையாளத்தில் மேலும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.