செல்லாத நோட்டுகள் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருவதுடன், பார்லிமென்ட்டையும் முடக்கி வரும் நிலையில், இது குறித்து பொதுமக்களின் கருத்தை, பிரதமர் நரேந்திர மோடி கேட்டுள்ளார்.
கறுப்புப் பணத்தை ஒடுக்கும் வகையில், செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். செல்லாத நோட்டு களை மாற்றுவதற்கு வங்கிகளுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில்,மத்திய அரசின் இந்த முயற் சியை எதிர்த்து, பல்வேறு எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்த திட்டத்தை கைவிடக் கோரி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால், பார்லிமென்ட் முடங்கி உள்ளது.
பல்வேறு முக்கிய திட்டங்களில் மக்கள் கருத்தை கேட்டு வரும் பிரதமர் மோடி, செல்லாத நோட்டுகள் விவகாரம் குறித்தும் மக்களின் மனநிலையை அறிய விரும்புகிறார்.
பொதுமக்களின் கருத்தை அறியும் வகையில், கருத்துக் கணிப்பை நடத்துகிறார். 'நரேந்திர மோடி ஆப்'பில், இதற்காக, 10 கேள்விகள் அடங்கிய கருத்துக் கணிப்பில் பங்கேற்கும்படி, 'டுவிட்டர்' சமூக வலைத்தளத்தில் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் மோடி வலியுறுத்தி உள்ளார்.
'அரசு நிர்வாகம் மற்றும்செயல்பாட்டில் மக்களின் நேரடி பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற நோக் கத்தில், மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்படு கிறது' என, பிரதமர் அலுவலகம் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
மோடியின் 10 கேள்விகள்:
நரேந்திர மோடி, 'ஆப்'பில் நடத்தப்படும் கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்டுள்ள, 10 கேள்விகளின் விபரம்:
1. இந்தியாவில் கறுப்புப் பணம் உள்ளது என்று நினைக்கிறீர்களா?
2. கறுப்புப் பணத்துக்கு எதிராக போராட வேண்டும், அதை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
3. ஒட்டுமொத்தமாக, கறுப்புப் பணத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
4. லஞ்சம், ஊழலுக்கு எதிரான, பிரதமர் மோடி அரசின் நடவடிக்கைகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
5. 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடி அரசின் நடவடிக்கை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
6. சில நோட்டுகளை செல்லாது என்ற அறிவிப்பால், கறுப்புப் பணம், ஊழல், தீவிரவாதத்தை ஒடுக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?
7. செல்லாத நோட்டுகள் அறிவிப்பால், ரியல்எ
ஸ்டேட், உயர் கல்வி, மருத்துவம் ஆகியவை, சாதாரண மக்களுக்கும் கிடைக்கும் வகையில் மாற்றம் ஏற்படுமா?
8. ஊழல், கறுப்புப் பணம், பயங்கரவாதம் மற்றும் கள்ள நோட்டுக்கு எதிரான நடவடிக் கைகளால் ஏற்படும் சிரமங்களை பொறுத்துக் கொள்ள தயாராக இருக்கிறீர்களா?
9. தற்போது போராட்டங்கள் நடத்தி வருபவர்கள் உண்மையில், கறுப்புப் பணம், ஊழல், பயங்கர வாதத்தை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத் துடன்தான் போராட்டம் நடத்துகின்றனர் என, நம்புகிறீர்களா?
10. பிரதமர் நரேந்திர மோடியுடன் பகிர்ந்து கொள்ள உங்களிடம் கருத்துகள், ஆலோசனை கள், யோசனைகள், திட்டங்கள் உள்ளனவா?
இவ்வாறு பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளன.
English Summary:
The opposition has strongly criticized over the issue of invalid banknotes, paralyzing Parliament in spite of the public's opinion about it, said Prime Minister Narendra Modi.